Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸின் அதிரடி முடிவால் திமுக கூட்டணியில் திடீர் பரபரப்பு!

தமிழ்நாட்டிலே சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழகத்தில் அரசியல் களம் விறுவிறுப்படைந்து இருக்கிறது எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் வேலையில் மும்மரமாக இறங்கியிருக்கிறார்கள் திமுக கூட்டணியில் மதிமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, அதோடு மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் இடம் பிடித்திருக்கின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் திமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்ய அந்த கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கே எஸ் அழகிரி தெரிவித்ததாவது நாம் ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த அளவிலான தொகுதிகளை தான் பெற்று வருகின்றோம். ஆகவே இந்த முறை குறைந்த இடங்களை பெற்றால் அடுத்த முறை இந்த இடமும் இருக்காது திமுக கொடுக்கும் தொகுதிகளுக்கு மலைக்கும் மடுவுக்கும் இருக்கின்ற வித்தியாசம் தான் இருக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு இந்த தேர்தலில் நான் இறுக்கிப் பிடிக்காமல் விட்டு விட்டால் நம்முடைய தன்மானம் போய்விடும். நம்முடைய கவுரவம் தான் நமக்கு முக்கியம். இதன் காரணமாக கூட்டணி உடைந்து விடும் என்பது அர்த்தம் கிடையாது. திமுகவும் நன்றாக இருக்க வேண்டும். அதே வேளையில் நாம் கூட்டணியிலும் இருக்க வேண்டும் அதிக தொகுதிகளை கேட்டு வாங்குவோம் என்று நம்பிக்கை இருக்கின்றது ஆனால் திமுக பிடிவாதமாக இருந்து வருகின்றது. தொகுதி பங்கீட்டின் மூலமாக கூட்டணி உடையாது என்று செயற்குழுவில் கண்ணீர்விட்டு கூறியிருக்கின்றார் கே எஸ் அழகிரி.

அதேவேளையில், நம்முடைய தன்மானத்திற்கு இழுக்கு வராத வகையில், நாம் நிச்சயமாக தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று தெரிவித்திருக்கின்றார் கே எஸ் அழகிரி. ஆனால் திமுக தரப்பில் காங்கிரஸ் கட்சியை பெரிய அளவில் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. காரணம் அந்தக் கட்சி தமிழகத்தில் பெரிய அளவில் சாதிக்க போவதில்லை சென்றமுறை நடைபெற்ற தேர்தலில் இரட்டை இலக்க தொகுதிகளை வாங்கிக்கொண்டு எட்டு இடங்களில் மட்டும்தான் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி.

சென்ற தேர்தலில் காங்கிரஸ் போன்ற தமிழகத்தில் பெரிய அளவில் பல மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகளை கொடுத்ததன் விளைவாக அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை எதிர்த்து மிகத் திறமையான வல்லமைமிக்க வேட்பாளர்களையும் நிற்கவைத்து சுலபமாக வெற்றி பெற்றுவிட்டார்.

அதனால் தான் சென்ற முறை சட்டசபை தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு திமுக காங்கிரஸ் போன்ற தமிழகத்தின் பலமில்லாத கட்சிகளுக்கும், அதோடு கூட்டணியில் இருக்கின்ற மற்ற சிறிய கட்சிகளுக்கும், பெரிய அளவில் தொகுதிகளை கொடுப்பதில் யோசித்து வருகிறது.

ஆனாலும் காங்கிரஸ் கட்சி தன்னுடைய தன்மானத்தை விட்டுக்கொடுத்து தொகுதிகளை பெறுவதற்கு தயாராக இல்லை என்று சொல்கிறார்கள்.என்னதான் கூட்டணி உடையாது என்று கே எஸ் அழகிரி தெரிவித்தாலும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தற்சமயம் திமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஆகவே தொண்டர்களின் எண்ணம் காங்கிரஸ் கட்சியில் பிரதிபலிக்கும் ஆனால் நிச்சயமாக திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி வந்து விடும் என்று சொல்கிறார்கள்.

Exit mobile version