வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஆளுநர்…! கடுமையான விளைவுகளை சந்திப்பினர்கள் என கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை…!

0
139

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆளுநர் தாமதம் செய்து கொண்டே இருந்தால் அவர் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி அவர் வெளியிட்டு இருக்கின்ற அறிக்கை ஒன்றில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுநர் தாமதம் செய்து வருவது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற பயம் ஏற்பட்டிருக்கின்றது சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கடந்த 15 9 2020 அன்று நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இன்றுவரை அவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது இதுபற்றி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுப்பிய கடிதத்திற்கு மூன்று அல்லது நான்கு வாரங்கள் அவகாசம் தேவைப்படுகிறது என ஆளுநர் தெரிவித்திருப்பது வெந்த புண்ணில் வேலினை பாய்ச்சுவது போல இருக்கின்றது தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் நிர்வாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக ஆளுநரை சந்தித்து தமிழக அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர் திராவிட முன்னேற்ற கழகமும் ஆளுநரை கண்டிக்கும் வகையில் ஆளுநர் மாளிகை முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருக்கின்றது ஆனால் ஆளுநர் எதற்கும் செவிசாய்க்க தயாராக இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு காலதாமதம் செய்யாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது விதி இந்த மசோதாவை பொருத்தவரையில் கடந்த 40 நாட்களாக அந்த சட்ட மசோதாவின் மேல் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தமிழக ஆளுநரை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.