Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

KUDAL PUZHU: குடற்புழுக்கள் நீங்க.. இந்த பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுங்கள்!!

KUDAL PUZHU: குடற்புழுக்கள் நீங்க.. இந்த பொடியை சாதத்தில் கலந்து சாப்பிடுங்கள்!!

நாம் பின்பற்றி வரும் மோசமான உணவு பழக்கம் நம் உயிருக்கு ஆபத்தான ஒன்றாக மாறி வருகிறது.பெரும்பாலான நோய்கள் ஆரோக்கியமற்ற உணவுகள் எடுத்துக் கொள்வதினால் தான் வருகிறது.

உடல் சீராக இயங்க குடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.ஆனால் உங்களில் பலர் கண்ட உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.இதனால் குடல் ஆரோக்கியம் முழுமையாக கெட்டுவிடுகிறது.குடலில் இருக்கின்ற புழுக்கள்,கழிவுகள் வெளியேற இந்த பொடியை பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வாயு விடகம் – 50 கிராம்
2)மிளகு – 15
3)சுக்கு – ஒரு துண்டு
4)ஓமம் – 10 கிராம்
5)கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
6)உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் வறுக்க வேண்டும்.அதற்கு முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து சூடாக்கவும்.

பிறகு வாயு விடகம் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.வாயு விடகம் தோற்றத்தில் மிளகு போன்று இருக்கும்.இது நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.தேவையான அளவு வாங்கிக் கொள்ளவும்.

பின்னர் அதில் மிளகு,கறிவேப்பிலை,ஓமம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.அனைத்து பொருட்களும் வறுபட்ட பின்னர் இறுதியாக ஒரு துண்டு சுக்கு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து இறக்கி ஆற விடவும்.

அதன் பிறகு இந்த பொருட்களை பொடித்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.குழம்பில் சேர்த்து சாப்பிடலாம்.அல்லது வெறும் பொடியை மட்டும் சாப்பிடலாம்.

இதை தொடர்ந்து பின்பற்றி வந்தால் குடற்புழு இருக்கின்ற புழுக்கள்,கழிவுகள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறிவிடும்.

மற்றுமொரு தீர்வு:-

1)வேப்பெண்ணெய்
2)பூண்டு
3)மஞ்சள் தூள்

செய்முறை:-

ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி வேப்பெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் நான்கு பல் உரித்த பூண்டு சேர்த்து வறுக்கவும்.பின்னர் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து கருகிடாமல் வறுத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கின்ற புழுக்கள்,கழிவுகள் மலம் வழியாக வெளியேறிவிடும்.

Exit mobile version