Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Kulavi Koodu Palan: உங்கள் வீட்டில் குளவி கூடு கட்டியுள்ளதா? அப்போ இதற்கு தான் காரணம்..!!

Kulavi Koodu Palan

xr:d:DAFYoV0vdGA:2,j:2497776676,t:23012501

Kulavi Koodu Palan: பொதுவாக நமது இந்து சாஸ்திரங்களின்படி பலவிதமான சாஸ்திரங்களை நாம் பின்பற்றி வருகிறோம். ஒரு புது வீடு கட்டுவது முதல் அந்த வீட்டிற்கு வாங்கும் பொருட்கள் என அனைத்திலும் வாஸ்து, பல சாஸ்திர சம்பரதாயங்களை பின்பற்றி வருகிறோம்.

அதனை பலர் மறுத்தாலும், நம்பிக்கை எல்லை என்று தெரிவித்தாலும் ஏதோ ஒரு செயலுக்காக கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏனென்றால் நமது சாஸ்திரங்கள் அறிவியலை பின்னணியாக கொண்டது என்று அனைவரும் அறிந்த ஒன்று தான். காலப்போக்கில் அதன் அறிவியலை பின்னணியை மறந்து விட்டு நாம் ஆன்மீக ரீதியாக பார்த்து வந்துள்ளோம்.
அந்தவகையில் காலம் காலமாக நமது முன்னோர்கள் ஒரு சில பலன்களை குறித்து வைத்துள்ளனர். அதில் ஒன்று தான் இந்த குளவி வீட்டில் கூடு கட்டினால் என்ன பலன் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனை இந்த பதிவில் (Kulavi Koodu Palan In Tamil) பார்க்கலாம்.

குளவி கூடு கட்டினால் என்ன பலன்

பொதுவாக நாம் இருக்க கூடிய இடங்களை பொறுத்து இந்த குளவி வருவதை கூறமுடியும். வயல்வெளிகளில் வீடு இருந்தாலோ அல்லது நம்மை சுற்றி மரங்கள், செடிகள் அல்லது வீடு சுத்தம் இல்லாமல் இருந்தால் முக்கியமாக கிராமப்புறங்களில் தோட்டம் எல்லாம் இருக்கும் எனவே அங்கு குளவி வருவது சாதாரண விஷயம் தான்.

அப்படி வீட்டிற்கு வரும் குளவி என்ன குளவி என்று பார்க்க வேண்டும். செங்குளவி வீட்டிற்குள் வந்தால் தான் நன்மை. ஒரு வீட்டிற்குள் செங்குளவி (sengulavi koodu kattinal enna palan) வந்தால் செல்வம் பெருகும். கடன் தொல்லை குறையும். மேலும் மனநிம்மதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

மேலும் செங்குளவி கூடு கட்டினால் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும்.

மேலும் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் சாெந்த வீடு வாங்க வாய்ப்புள்ளது. வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு வாங்க அல்லது வாங்குவதற்கான பணம் சேமிப்பீர்கள்.

கூடு கட்டும் குளவி பெரும்பாலும் வீட்டின் வாசல் நிலைப்படியில் கட்டும், ஜன்னலில் கட்டும், சுவரில் கட்டும், கண்ணாடியில் கட்டும். அப்படி கூடு கட்டி வந்தால் நீண்ட நாட்கள் குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என கூறப்படுகிறது. முக்கியமாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கும் என கூறப்படுகிறது.

மேலும் குளவி கூடு கட்டும் மண்ணானது சுத்தமான மண்ணாகும். யாரும் தொடாத அல்லது மிதிக்காத மண்ணை கொண்டு தான் குளவி கூடு கட்டும். எனவே அந்த குளவி கூட்டில் உள்ள மண்ணை எடுத்து பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க:ஒரு முறை இந்த தீபம் ஏற்றி பாருங்கள்.. உங்கள் வீட்டில் உள்ள கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்..!!

Exit mobile version