Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பலனளிக்காத டிடிவியின் ராஜதந்திரம்!

சென்ற 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் வாக்காளர்கள் எல்லோருக்கும் 20 ரூபாய் டோக்கனை கொடுத்து தனக்கு வாக்களிக்குமாறு தெரிவித்துவிட்டு தேர்தல் முடிந்த பின்பு பணம் கொடுப்பதாக சொன்னார்.

அதனை ஏற்று பொதுமக்களும் அவரை வெற்றிபெற வைத்தார்கள்.ஆனால் இதன் பிறகு தேர்தல் முடிந்து அவர் வெற்றி பெற்றவுடன் அந்த தொகுதியின் மக்களை திரும்பி கூட பார்க்கவில்லை என்று ஆர்கே நகர் தொகுதி மக்கள் புலம்பத் தொடங்கி இருந்தார்கள். இது தமிழகத்திலே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர் கே நகரில் அந்தக் கட்சி எந்த உத்தியை கையாண்டதோ அதே யுக்தியை தற்போதும் கையாண்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் பெரிய கடை தெரு பட்டாச்சாரியர் தெருவில் பிரிமியம் ஏஜென்சி மளிகை கடை செயல்பட்டு வருகின்றது.

இந்த கடைக்கு துண்டு சீட்டுடன் வருகைதந்த வாடிக்கையாளர்கள் கடையின் பெயரை எழுதி அதற்கு கீழே ரூபாய் இரண்டாயிரம் என்று எழுதிவிட்டு இந்த டோக்கனை கொடுத்து அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் பணத்திற்கு பதிலாக தங்களுடைய கடையில் இலவசமாக பொருட்களை வாங்கிக் கொள்வதற்காக கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் மற்றும் அதிமுக பிரமுகர் ஷேக் முஹம்மது தான் யாருக்கும் டோக்கன் கொடுக்கவில்லை எனவும் இது சம்பந்தமாக யாருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கவில்லை என்றும் உறுதியளித்தார்.இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள் தாமதமாக டோக்கன் வாங்கி வைத்து ஏமாற்றப்பட்டு இருப்பதை தெரிந்து கொண்ட நிலையில், கூட்டம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே போனது.

இதனைத்தொடர்ந்து மளிகைக் கடையின் உரிமையாளர் கடையை பூட்டி கடையில் வேட்பாளர்கள் கொடுக்கும் எங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை இந்த டோக்கனுக்கு கடை நிர்வாகத்திற்கும் எந்தவிதமான பொறுப்பும் கிடையாது அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சுவரில் எழுதி ஒட்டிவிட்டு கடையை பூட்டி விட்டு சென்று விட்டார்.

மேலும் இதுதொடர்பாக கும்பகோணம் நகர பொதுமக்களிடம் விசாரணை செய்த சமயத்தில் கும்பகோணம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளருக்கு ஆதரவாக குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று ரூபாய் 2000 டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்த மறுநாள் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல் வாண்டையாரிடம் விசாரணை செய்ததில் பிரீமியம் ஏஜென்சி மளிகை கடை பெயரில் 2000 ரூபாய் டோக்கன் கொடுத்தது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் என்று தெரிவித்திருக்கிறார். இதனை தொடர்ந்து தற்சமயம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளர் பாலமுருகன் காவல் துறையைச் சார்ந்தவர்கள் வலைவீசி தேடி வருவதாக சொல்லப்படுகிறது.

அதோடு இதெல்லாம் யாருடைய தூண்டுதலின் பெயரில் செய்யப்பட்டது. இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டது யார் என்று யோசித்தால் உடனடியாக நினைவுக்கு வருவது தமிழக அரசியலில் இருக்கும் ஒரு முக்கிய புள்ளி தான் என்பது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.தேர்தல் சமயம் என்று வந்துவிட்டால் அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் இப்படி ஓட்டுக்காக தகிடதத்தம் வேலை போடுவது காலம் காலமாக நடைபெற்று வருவது தான் ஆனால் இத்தனை ஆண்டுகாலம் அதனை பார்த்து இருந்தும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டே இருப்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

Exit mobile version