Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூங்காவில் சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ‘கும்கி’ நடிகர்… போக்ஸோ சட்டத்தில் கைது… ஜாமீன் மறுப்பு

பூங்காவில் சிறுமிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட ‘கும்கி’ நடிகர்… போக்ஸோ சட்டத்தில் கைது… ஜாமீன் மறுப்பு

மலையாள நடிகரான ஸ்ரீஜித் தமிழிலும் கும்கி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

நடிகர்  ஸ்ரீஜித் ரவி, கடந்த ஜூலை 4 அன்று அய்யந்தோளில் உள்ள எஸ்என் பூங்காவில் ஒன்றில் இரண்டு குழந்தைகளுக்கு தனது பிறப்புறுப்பை வெளிக்காட்டி ஆபாசமாக செயல்பட்டத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. வெளியான தகவல்களின் படி இரண்டு சிறார்களும் 9 மற்றும் 14 வயதுடையவர்கள்.

இதையடுத்து சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் ஸ்ரீஜித் இச்சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது சம்மந்தமான வழக்கு விசாரணையில் ரவிக்கு ஜாமீன் வழங்க திருச்சூர் நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துள்ளது.

நீதிமன்றம் ஸ்ரீஜித்துக்கு ஜாமீன் மறுத்து, 14 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. ஸ்ரீஜித்துக்கு உடலை வெளிக்காட்டி மகிழும் எக்ஸ்பிஷனிசம் என்ற பிரச்சனை இருப்பதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தரப்பு கூறியதாக சொல்லப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 41 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், ஸ்ரீஜித் இதுபோன்ற நடவடிக்கையில்  ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுவது இது முதல் முறையல்ல என்று அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த சம்பவம் இப்போது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version