Kundrinmani:இது தெரியுமா? குன்றிமணி விதை இலையை அரைத்து.. இப்படி பயன்படுத்தினால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
முட்டை வடிவில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் கண்ணை கவரும் வடிவில் காணப்படும் குன்றின்மணி விதை அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தவை.வேலி மற்றும் புதர்களில் இந்த குன்றின்மணி தாவரம் படர்ந்து வளர்கிறது.
குன்றின்மணி விதை,வேர்,இலை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை.உடலில் ஏற்படும் சளி,நரம்பு கோளாறு,குடல் வலி உள்ளிட்ட பல பாதிப்புகளை குணப்படுத்துகிறது.
குன்றின்மணி இலையை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் சளி,இருமல் பாதிப்பு சரியாகும்.அதேபோல் இலையில் கசாயம் செய்து குடித்து வந்தால் குடல்வலி பிரச்சனை சரியாகும்.
உடலில் வலி,வீக்கம் காணப்பட்டால் அதை குணமாக்க குன்றின்மணி இலையை அரைத்து சிறிது நல்லெண்ணெய்யுடன் சேர்த்து அந்த இடங்களில் பூசி வந்தால் விரைவில் வீக்கம் வற்றும்.
குன்றின்மணி விதையை அரைத்து தோல் மீது பூசி வந்தால் உடல் வலி,நரம்பு வலி சரியாகும்.குன்றின்மணி விதையை அரைத்து கையாந்திரை சாறுடன் கலக்கவும்.பிறகு 250 மில்லி நல்லெண்ணெயில் அவற்றை போட்டு காய்ச்சி தலைக்கு பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு நின்று அடர்த்தியாக வளரும்.
அதேபோல் குன்றின்மணி மற்றும் வெந்தயத்தை சம அளவு எடுத்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் கூந்தல் பளபளப்பாக மாறும்.சிறுநீர்போக்கு பாதிப்பு இருப்பவர்கள் குன்றின்மணி இலையில் பானம் தயாரித்து குடித்து வரலாம்.உடலில் பித்தம் உள்ளவர்கள் குன்றின்மணி விதையை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.