எம்ஜிஆரின் நடித்துவ்இயக்கிய அனைத்து காசையும் செலவு செய்த படம் என்றால் உலகம் சுற்றும் வாலிபன். இந்த படத்திற்கு பல தடைகள் வந்திருந்தாலும், படத்தின் பாதியில் நடிகை பானுமதி விலகியிருந்தாலும், மஞ்சுளாவை தேர்வு செய்து தனது மொத்த சொத்தையும் வைத்து எம்.ஜி.ஆர் இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஹிட்டானால் மன்னன் இல்லை என்றால் நாடோடி என்று எம்.ஜி.ஆர் கூறியிருந்தார்.
இந்த படத்தை தொடங்கும்போது கண்ணதாசன் அவர்களிடம். படத்திற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன் என்று கூறிய எம்.ஜி.ஆர் பாடல்கள் நீங்கள் தான் எழுத வேண்டும் என்று கவிஞர் கண்ணதாசனிடம் கூறியுள்ளார்.
ஆனால் எம்ஜிஆர் சகோதரர் சக்கரபாணிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் இந்த படத்திற்கு சரியாக வரமாட்டார் என்று தோன்றியுள்ளது. இதை அவர் எம்ஜிஆர் இடம் கூறியுள்ளார். இது உலகம் முழுவதும் படமாக்கப்படும் ஒரு படம். அனைவரும் வெஸ்டர்ன் இசையை கேட்பார்கள். ஆனால் குன்னக்குடி இசை இதற்கு சரியாக வராது. எம்.எஸ்.விஸ்வநாதன் தான் இதற்கு சரியான இசையை கொடுப்பார். குன்னக்குடி வைத்தியநாதனுக்கு கொடுத்த வாக்குக்காக அவருக்கு வேறு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதைப்பற்றி எம்ஜிஆர் R M வீரப்பனிடம் சொன்ன பொழுது, சரிதான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. கண்ணதாசனை தொடர்பு கொண்ட எம்ஜிஆர் படத்திற்கு எம்.எஸ்.வி தான் இசை நீங்கள் பாடல் எழுதுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு கண்ணதாசன் பாடல்களையும் எழுதியுள்ளார்.
அதேபோல் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக 1977-ம் ஆண்டு வெளியான நவரத்தினம் என்ற படத்தில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர்.