Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சுயநலம் மிக்கவர்கள்! ரஜினி ரசிகர்களை ஆடிட்டர் குருமூர்த்தி!

ரஜினி கட்சி தொடங்க வில்லை என்று தெரிவித்த உடனேயே அவருடைய ரசிகர்கள் பலர் அதிமுகவும் திமுகவும் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள். ஊழலை ஒழித்து விட வேண்டும் என்று ரஜினிகாந்த் நினைத்திருந்தார். ஆனால் தற்போது அந்த ஊழல் எங்கிருந்து ஊற்றெடுக்கிறதோ அந்த கட்சியில் போய் அவருடைய ரசிகர்கள் சேர்ந்து இருப்பது ஒரு சிலருக்கு வேண்டும் என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு காரணம் எதுவும் இல்லை என்று ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பாக பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி வெளியிட்டிருக்கிற ஒரு கட்டுரையில் தெரிவித்திருக்கிறார்.

அதில் ரஜினிகாந்த் நேர்மையானவராக இருக்கலாம் .ஆனாலும் அவருடைய ரசிகர்கள் ஒன்றும் கக்கன் மற்றும் காமராஜருக்கு அடுத்த வீட்டுக்காரர்கள் கிடையாது என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

தலைமை ஏற்க வா தலைவா வா என்று அனைத்து பகுதிகளிலும் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் தியாகத்தின் திரு உருவங்கள் கிடையாது. ஆதாயத்தை எதிர்பார்க்காமல் இதையெல்லாம் செய்து இருப்பார்களா? யார் செய்த புண்ணியமோ ரஜினிகாந்த் ரஜினி ரசிகர்களுக்கும் அரசியல் என்பது ஒரு பணம் பார்க்கும் வழிமுறையாக இருந்திருக்கின்றது. அதன் காரணமாக இவ்வளவு சீக்கிரமாக அனைவரும் அரசியல் கட்சிகளில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்திருக்கிறார் ஆடிட்டர் குருமூர்த்தி.

அதுவும் ஒருவகையில் யோசிக்க வேண்டிய விஷயமாக தான் இருக்கின்றது. ஒருவேளை அவர்கள் ரஜினி மீது உண்மையான மரியாதை வைத்திருந்தார்களேயானால் ரஜினிகாந்த் அறிவித்த அறிவிப்பிற்கு நிச்சயமாக வரவேற்பு தெரிவித்து அவர் வழியை பின்பற்றி இருப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள். ரஜினிகாந்தின் உண்மையான அபிமானிகள்.

Exit mobile version