Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்!

“காந்திமதி வந்தாலும் சரி கடவுளே வந்தாலும் சரி…” அதர்வாவின் குருதி ஆட்டம் டிரைலர் ரிலீஸ்!

குருதி ஆட்டம் திரைப்படம் தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போதுதான் அந்த படம் ரிலீஸாக உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மறைந்த முரளியின் மூத்த மகன் அதர்வா பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். பாலா இயக்கத்தில் அவர் நடித்த பரதேசி திரைப்படம் அவருக்கு பரவலான கவனத்தைப் பெற்று தந்தது. அதன் பின்னர் அவரால் பெரிய அளவில் ஹிட்படங்கள் கொடுக்க முடியவில்லை. தனக்கான இடத்துக்காக அவர் போராடிக் கொண்டு இருக்கிறார்.

இந்நிலையில் 8 தோட்டாக்கள் என்ற வெற்றிப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இளம் இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள திரைப்படம் குருதி ஆட்டம் ரிலீஸாகாமல் முடங்கிக் கிடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதன் படப்பிடிப்பு முடிந்தாலும் தயாரிப்பாளரின் பொருளாதார சூழல் காரணமாக படம் ரிலீஸாகவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் அதுவும் தள்ளிவைக்கப்பட்டது.

இதனால் படம் தொடக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இப்போது ரிலீஸ் ஆக உள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி நல்ல கவனத்தைப் பெற்றுள்ளது. மதுரை பின்னணியில் ஆக்‌ஷன் கதைக்களமாக உருவாகியிருக்கும் படமாக குருதி ஆட்டம் உருவாகியுள்ளது.

Exit mobile version