Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவங்களுக்கு இதே பொழப்பா போச்சு! திமுகவை சாடிய குஷ்பூ!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை அடையாறில் பாஜகவின் சார்பாக ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ மற்றும் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், பால் விலை மற்றும் மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய பாஜகவின் செயற்குழு உறுப்பினரான குஷ்பூ தமிழக முதல்வர் தேர்தலின் போது தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனவும் பால் விலை மின்கட்டண விலை குறைப்போம் என்று தெரிவித்து ஆட்சிக்கு வந்து பால் மற்றும் மின் கட்டண விலையை உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார். மக்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக அவர் விமர்சனம் செய்திருக்கிறார்.

அதோடு திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் பெண்கள் பல்வேறு வகைகளில் ஆட்சியாளர்களால் மற்றும் அமைச்சர்களால் அவமானப்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்த அவர் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதற்கு முன்பில் இருந்தே ஜிஎஸ்டி இருந்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியாளர்கள் தமிழகத்தில் மின் கட்டணம் மற்றும் பால் விலை விளைத்தவற்றை உயர்த்தி விட்டு மத்திய அரசின் மீது பழி சுமத்துவதாக கூறினார்.

தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி திமுக அரசு எந்த அறிவிப்பையும் செயல்படுத்தவில்லை என தெரிவித்த குஷ்பூ, தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பெண்கள் இழிவுபடுத்தப்படுவதை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கும் மனநிலை தான் திமுகவின் அமைச்சர்களின் நிலை அதனை யாரும் தட்டி கேட்க கூட முன்வரவில்லை என்றும் குஷ்பூ மற்றும் சுமத்தினார்.

Exit mobile version