Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி

நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதி

நடிகை மற்றும் அரசியல்வாதி குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் 90களில் வலம் வந்தவர் குஷ்பு இவருக்காக தமிழ்நாட்டில் கோயில் கட்டியவர்கள் எல்லாம் உண்டு. சினிமா, அரசியல், திரைப்பட தயாரிப்பு ,சீரியல்,தொகுப்பாளர் என பல திறமையால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்தான் .தனக்கென தனி இடத்தையும் பிடித்து கொடி கட்டி பறந்து வருகிறார்.

சினிமாவில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் அரசியலில் குஷ்புவால் இன்னும் ஜொலிக்க முடியவில்லை. முதலில் திமுகவில் இணைந்தவர், பின்னர் அங்கிருந்து காங்கிரஸில் மையமிட்டார். பின்னர் அங்கிருந்தும் பாஜகவுக்கு தாவினார்.

அங்கு எம் எல் ஏ சீட் பெற்ற குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். அதன் பின்னர் அரசியலிலும் எந்த விறுவிறுப்பும் இல்லாமல் இப்போது மீண்டும் ஒரு மெகா சீரியலில் நடித்து வருகிறார். மேலும் தன்னுடைய கணவர் சுந்தர் சி இயக்கும் படங்களை தயாரித்தும் வருகிறார்.

சமூகவலைதளங்களில் மிகவும் தீவிரமாக இயங்கும் குஷ்பு, தற்போது பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் தன்னுடைய புகைப்படத்தைதான் அவர் பகிர்ந்துள்ளார். இது சம்மந்தமாக “முதுகுத்தண்டில் கடுமையான வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும்” கூறியுள்ளார். சமீபத்தில் குஷ்பு தனது உடல் எடையைக் குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version