Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

உங்களிடம் வேகமோ, வெறித்தனமோ இல்லை; இளைஞரின் டுவிட்டர் விமர்சனத்தை ஏற்றுக் கொண்ட குஷ்பு..?

நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறாமலும், வெற்றிக் கனியை பறிக்காமலும் முழுவதுமாக மண்ணை கவ்வியது டெல்லி காங்கிரஸ் தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது

இந்த தேர்தல் தோல்வி சம்பந்தமாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு டுவிட்டரில் வருத்தமான பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில் இளைஞர் ஒருவர் குஷ்புவிற்கு அரசியல் பாடத்தையே கற்பித்து விட்டார். அப்பதிவில் இளைஞர் கூறியிருப்பதாவது:

உங்கள் கட்சிக்கு அரசியலில் வேகமோ, மூர்க்த்தனமோ கடுமையாக உழைத்து வெற்றியை பறிக்கும் வெறித்தனம் இல்லை, தெளிவு இல்லை என்று பின்னூட்டம் போட்டிருந்தார். இளைஞரின் ஒட்டுமொத்த அரசியல் பேச்சுக்கும் “நான் இதை ஒப்புக் கொள்கிறேன்” என்று அதிர்ச்சி தரும் விதமாக குஷ்பு பதில் அளித்திருந்தார். குஷ்புவின் பதிலை பலரும் எதிர்பாராத வியப்பில் ஆழ்ந்து போனார்கள்.

மேலும், டெல்லி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் நாம் வருத்தம், வேதனையுமாய் இருப்பதை மாற்றி அமைக்கும் விதமாக இனி நமது செயல்பாடு இருக்க வேண்டும் என குஷ்பு பதிவிட்டிருந்தார். டெல்லியில் போட்டியிட்ட ஆளும் கட்சி பாஜகவும் பெரிய அளவில் வெற்றி வாகை சூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுத்தமாக ஒயிட்வாஷ் செய்தது போல் டெல்லியில் ஒரு இடத்தை கூட ஜெயிக்காத காங்கிரஸ் கட்சி, இனி வருங்கால அரசியலில் தலை தூக்குமா என்பது இந்த தேர்தலின் மூலம் கேள்வியாகி உள்ளது.

Exit mobile version