Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கடவுள் அனுகிரகத்தால் தப்பி விட்டேன்! நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!

பிரபல நடிகையும் பாஜகவின் பிரமுகருமான குஷ்பூ அவர்களின் கார் சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்ட நிலையில், அந்த முருகன் தான் என்னை காப்பாற்றி இருக்கிறார். என்று நடிகை குஷ்பு மனமுருகி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அதனை தொடர்ந்து இவர் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராகவும், சில தொலைக்காட்சித் தொடர்களிலும், நடித்து வந்தார்.

அதோடு இவர் அரசியலிலும் மிக ஆர்வமாக இருந்தார். இவ்வாறான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்த நடிகை குஷ்பூ சமீபத்தில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அந்த கட்சியின் சார்பாக நடத்தப்படும் பல போராட்டங்களில் பங்கு பெற்று வரும் நடிகை குஷ்பூ இன்றைய தினம் கடலூரில் நடைபெறவிருக்கும் வேல் யாத்திரையில் பங்கு பெறுவதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

அந்த சமயம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், அருகே சென்று கொண்டிருந்தபோது, புதுச்சேரி நோக்கி போய்க் கொண்டிருந்த, கன்டெய்னர் லாரி ஒன்று குஷ்பு சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது கார் கண்ணாடிகள் உடைந்தன. அதோடு நடிகை குஷ்பு விற்கும் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் பரவியது.

இந்த சூழ்நிலையில் ,தற்போது நடிகை குஷ்பு தன்னுடைய வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வேல்யாத்திரைக்காக சென்னையிலிருந்து கடலூர் சென்று கொண்டிருந்த நேரத்தில், மேல்மருவத்தூர் அருகே ஒரு விபத்தை சந்தித்தேன். டேங்கர் லாரி ஒன்று என்னுடைய காரின் மீது மோதியது கடவுளுடைய அனுக்கிரகத்தால், எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. போலீசார் இதனை விசாரணை செய்து வருகிறார்கள் கடவுள் முருகன் என்னை காப்பாற்றி விட்டார் என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version