Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் சின்ன தம்பி குஷ்புவாக மாறிய நடிகை! கிளுகிளுப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒரு நடிகை என்பதையும் கடந்து தற்போது தயாரிப்பு, அரசியல், என்று இரு மிகப்பெரும் துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்தவர் நடிகை குஷ்பு இவர் இதுவரையில் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவைப் பொறுத்தவரையில் நடிகைகள் ஒல்லியாக இருந்தால்தான் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எல்லோரும் நினைத்திருந்த போது அதனை அப்படியே தலைகீழாக மாற்றிய ஒரே நடிகை குஷ்பூ தான். சற்று பூசிய உடலுடன் இருந்த இவரை தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. அதன் காரணமாகத்தான் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு சென்றார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

 

 

அதோடு சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஒருகாலத்தில் திகழ்ந்த ரஜினி, கமல், பிரபு, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்த இவருக்கு சின்னத்தம்பி திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்த திரைப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

அண்மையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்த அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை அடைந்தது. அதனை அடுத்து குஷ்பு சற்று குண்டாக இருந்த தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் என்று சொல்லப்படுகிறது.

பல முயற்சிகளுக்குப் பிறகு நடிகை குஷ்பூ தற்சமயம் தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்திய வருகிறார் அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளத்தில் பயங்கரமான வைரலாக பரவியது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர், தற்போது உடற்பயிற்சி நிலையத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் அவர் நோய்தொற்று பாதிப்புக்கு பிறகு மறுபடியும் தன்னுடைய பணிகளை தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அதோடு அவர் எல்லோரும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்றும், கூறி இருக்கிறார். அவருடைய இந்த பதிவானது தற்சமயம் அனைவருடைய பாராட்டையும் பெற்று வருகிறது.

Exit mobile version