கோயமுத்தூர் மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு! ஒத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல்!

0
133

நேற்று முன் தினம் தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று அந்தந்த மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மேயர் மற்றும் துணை மேயர் உள்ளிட்டோர் பதவியேற்கும் நிகழ்வு காலை முதலே நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

அதாவது ஒரு சில பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு குறைவாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் கவுன்சிலர்கள்.

கடலூரை பொருத்தவரையில் திமுகவின் கவுன்சிலர் ஒருவர் மேயர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தார். அவரை ஏற்றுக் கொள்ளாமல் 20க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஆகவே அங்கே பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது மேலும் கவுன்சிலர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு காவல்துறையினருக்கு குவிக்கப்பட்டார்கள்.

இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் பதவியேற்ற சூழ்நிலையில், இன்று மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர் நகராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக 4 அதிமுக 4 என்று வெற்றி பெற்று சம பலத்தில் இருப்பதால் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறவிருந்தது.

தலைவர் தேர்தலுக்கு 50 சதவீத உறுப்பினர்களுக்கு மேல் ஆதரவு பெற்றிருக்க வேண்டும் ஆனாலும். இன்று புதிய உறுப்பினர்கள் வராததன் காரணமாக, தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுக மற்றும் திமுகவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.