Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தைகளுக்கு உண்டாகும் தோஷம் விலகி செல்ல வழிபட வேண்டிய ஆலயம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் தோஷம் என்பது இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் தோஷமே இல்லாத ஜாதகம் இல்லை என்ற அளவிற்கு தற்போது உலகம் மாறிப் போயிருக்கிறது.

நிச்சயமாக இவ்வுலகில் பிறக்கும் அனைவருக்கும் ஏதாவது ஒரு தோஷம் இருக்கத்தான் செய்கிறது. அந்த தோஷத்தை நீக்க வேண்டி பல ஜோதிடர்கள் மற்றும் கோவில்கள் என்று பல இடங்களுக்கு மக்கள் சென்று வருகிறார்கள்.

அதிலும் பெரும்பாலானோருக்கு தற்சமயம் செவ்வாய்தோஷமிருக்கிறது. இந்த செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தையே தற்போது பார்ப்பது மிக, மிக அரிதாக காணப்படுகிறது.

திருமணம் என்று வந்துவிட்டால் முதலில் இந்த செவ்வாய் தோஷத்தை தான் அனைவரும் பார்க்கிறார்கள்.ஏனென்றால் அந்த செவ்வாய் தோஷம் அவ்வளவு கடினமானது என தெரிவிக்கிறார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில், தோஷமிருப்பவர்களுக்கு அந்த தோஷத்தை நீக்குவதற்கான வாய்ப்பில்லை ஆனால் அந்த தோஷத்தின் தாக்கத்தை குறைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.

அந்த வகையில் தற்கால இளம் தலைமுறையினராக இருக்கும் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய தோஷத்தை நீக்குவதற்காக செல்ல வேண்டிய கோவில் பற்றி இங்கே காணலாம்.

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தலைஞாயிறு என்ற ஊர் எங்கே குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

இந்திரன் தான் செய்த குற்றம் ஒன்றை பொறுத்தருள வேண்டும் என்று இந்த தல இறைவனை வழிபட்டு பலன் பெற்றான் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகதான் இத்தல இறைவனுக்கு குற்றம் பொறுத்த நாதர் என்ற பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் சப்த ரிஷிகளில் ஒருவராக போற்றப்படுபவர் வசிஷ்டர் அவர் ஒருமுறை ஞானம் பெறுவதற்காக பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவரை சந்தித்த பிரம்மதேவர் தர்மம் ஒன்று செய்தால் அதன் பலன் 10மடங்காகக் கிடைக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.

அங்கே சென்று சிவபூஜை செய்தால் ஞானம் பெறலாம் என்று இந்த தல பெருமையை தெரிவித்து அனுப்பி வைத்தார். வசிஷ்டரும் இந்த திருத்தலம் உள்ள பகுதிக்கு வந்து சிவலிங்கம் ஒன்றை நிறுவி வழிபட்டு அதன் மூலமாக ஞானம் பெற்றார் என தெரிவிக்கப்படுகிறது.

இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்யும் எவருக்கும் அடுத்த பிறவி இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது. குழந்தை பாக்கியமில்லாதவர்கள், குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷமிருப்பவர்கள், ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை வேண்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபட அவர்கள் விரும்பிய பலன் கிடைக்கப் பெறுவதாக அனுபவம் பெற்றவர்கள் தெரிவிக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் தட்சிணாமூர்த்திக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version