Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஈரோடு-தாராபுரம் அகல ரயில்பாதை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த எல்.முருகன்

ஈரோட்டில் இருந்து தாராபுரம் வழியாக பழனி செல்லும் புதிய அகல ரயில் பாதை குறித்து, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேற்று சந்தித்து பேசினார்.

அந்த சந்திப்பின்போது , ‘‘மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், அப்பகுதியின் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்பது தாராபுரம் மக்களின் நீண்டகால கோரிக்கை என தெரிவித்த முருகன் வாரணாசியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக ராமேசுவரத்துக்கு பயணிகள் விரைவு ரயிலை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது பாரம்பரிய நகரமான காஞ்சிபுரத்தை, ராமாயணம் சுற்றுலா இணைப்புப் பாதையோடு இணைக்க உதவும் என்றும் உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும்’’ என்றும் ரயில்வே அமைச்சரிடம் எல்.முருகன் தெரிவித்தார். இந்த இரண்டு கோரிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விரிவாக விவாதித்து, தமிழ்நாட்டின் ரயில்வே துறையை மேம்படுத்த தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளாதாகவும் முருகன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version