Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்குவதற்காக விவசாயிகளை சந்திக்கும் எல். முருகன்!

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன்.

கடுமையான பனிப்பொழிவையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் முற்றுகைப் போராட்டம் 23வது நாளாக நடந்து வருகின்றது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்று வருகிறார்கள். ஆறுமுறை மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எதுவுமே வெற்றி பெறவில்லை, இதனை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று தெரிவித்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் வழியாக பல நன்மைகள் வந்து சேரும் எனவும், எதிர்க்கட்சிகளின் தவறான பிரச்சாரத்தின் மூலமாக போராட்டத்திற்கு தூண்டுதலாக இருக்கிறார்கள் எனவும், மத்திய அரசு குற்றம் சாட்டி வருகின்றது. இந்த நிலையிலே, வேளாண் சட்டங்களை ஆதரிக்கும் விதமாக டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை சந்தித்து பேச இருக்கின்றார், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில், நாளைய தினம் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கும் அவர் , அரியலூர் மாவட்டம் டி பழுர், தஞ்சாவூர் மாவட்டம் திப்பிராஜபுரம், அம்மாபேட்டை, இரும்புத்தலை கள்ளபெரம்பூர், பகுதியில் விவசாயிகளை சந்தித்து அந்த மூன்று வருடங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கின்றார்.

வரும் 20ஆம் தேதி காலை தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் வி. கே. சிங் பங்கேற்கிறார். அன்றைய தினமே ஒரத்தநாடு தலையாமங்கலம், திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை, விக்கிரபாண்டியம், பகுதிகளில் இந்தக் கூட்டமானது நடைபெறுகின்றது. 26ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் தில்லைநாயகம். நாகை மாவட்டம் மருதூர் கொள்ளிடம் பகுதி விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற இருக்கின்றது. அதில் பாஜகவின் தலைவர் எல்.முருகன் பங்கேற்கிறார்.

Exit mobile version