Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்வரை சந்தித்த எல்.முருகன்……! பாஜகவின் அடுத்த திட்டம் என்ன …….!!!!?

தமிழக பாஜக தலைவர் எல் .முருகன் அவர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து முதல்வரின் தாயாருடைய மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் தமிழக முதல்வர் அவர்களின் இல்லத்தில் பாஜக தமிழக தலைவர் திரு எல் முருகன் அவர்கள் முதல்வரை சந்தித்தார். அப்போது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் தாயாரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தன் தாயாரின் மறைவை அடுத்து கடந்த சில நாட்களாகவே, தனது பூர்வீக இல்லம் உள்ள சேலம் எடப்பாடியில் முதல்வர் பழனிசாமி இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு சென்னைக்கு வந்த முதல்வரை, திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி, ஆகியோர் முதல்வரை சந்திக்க சென்றிருந்தனர்.

சென்ற வாரம் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் அவர்கள் வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவினால் உயிரிழந்தார். அவருடைய இறுதிச் சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம பாளையத்தில் நடந்தது. இந்நிகழ்வில் அதிமுகவின் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version