Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அவர்களால் வாக்கை மட்டுமே கொடுக்க முடியும் நிறைவேற்ற இயலாது! மத்திய இணை அமைச்சர் விமர்சனம்!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கார் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட மத்திய இணையமைச்சர் முருகன் மாவட்ட தலைவர்களுக்கு காரை பரிசாக வழங்கினார்.

இதனையடுத்து அவர் உரையாற்றும்போது திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்று வாக்குறுதிகளை மட்டும் கொடுக்கும் ஆனால் அதனை நிறைவேற்ற அந்தக் கட்சியால் இயலாது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனாலும் இது வரையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை இந்த சூழ்நிலையில், அவர்கள் ஆட்சிக்கு வந்து நூறு தினங்கள் ஆகியதை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்தார் மத்திய இணையமைச்சர் முருகன்.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் மாவட்ட தலைவர்கள் மகாராஜன், தர்மராஜ், சிவசுப்பிரமணியன், நந்தகுமார் மற்றும் அந்த கட்சியை சார்ந்த பலரும் பங்கேற்றார்கள்.

Exit mobile version