Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என கூறுவது ஸ்டாலின் கற்பனையே -எல்.முருகன்!

#image_title

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது திருப்திக்காக கூறி வருகிறார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி வைத்திகுப்பம் பகுதியில் மீனவர்களின் குறை கேட்பு நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மீனவர்களுக்காக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களை எடுத்து கூறி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம், கர்நாடகாவில் ஏற்பட்ட தோல்வியை வைத்து எதையும் கூறிவிட முடியாது, தமிழகத்தில் நடந்த பல தேர்தல்களில் திமுக தோல்வி அடைந்துள்ளது என்றும், தமிழ் மண்ணான புதுச்சேரியில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது என்று தெரிவித்தவர்.

திராவிட மண்ணில் பாஜக வர முடியாது என ஸ்டாலின் கூறுவது அவருடைய கற்பனை என்றும் தனது திருப்திக்காக இது போன்று அவர் கூறி வருவதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

Exit mobile version