கன்னியாகுமரி மாவட்டத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை! இதுதான் காரணமா?
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே முட்டை காடு பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (54) இவரது மனைவி இவர் கூலி வேலை செய்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு தக்கலை அருகே சாரோடு என்ற இடத்தில் வாடகைக்கு வீடு எடுத்து குமாரசாமி அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். குமாரசாமி கடந்த சில நாட்களாக சிறுநீரக கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பெற்ற காரணத்தால் வேலைக்கு செல்லவில்லை இதனால் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது.
மேலும் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேனில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து மனைவி வீட்டுக்குள் வந்து பார்த்தபோது குமாரசாமி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதை கண்ட குமாரசாமியின் மனைவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குமாரசாமியை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் குமாரசாமியை பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனவும் கூறினார்கள். இந்த தற்கொலை சம்பந்தமாக குமாரசாமியின் மனைவி பிறேமபுனிதா தற்கொலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குமாரசாமி தூக்கிட்டு தற்கொலை காரணம் என்ன என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.