சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

0
124

சம்பளத்தை குறைத்தால் கடும் நடவடிக்கை – எச்சரிக்கும் தொழிலாளர் ஆணையம்

கடந்த மார்ச் மாதம் சீனாவின் வுகான் மாகானதில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ள கொரோனா தொற்றினால் ஐடி நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நிறைய நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணியாளர்களை வேலை செய்ய சொன்னாலும், அமெரிக்கா மற்றும் யூரோப்பை பெரிய அளவில் நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்களுக்குப் பெரிய சவால்கள் வரும் மாதங்களில் காத்திருக்கிறது. கொரோனா தொற்றால் , அமெரிக்கா மற்றும் யூரோப்பில் நிறைய பேர் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். இதனால் அந்த அரசுகள் தங்கள் நாட்டு குடிமகன்களுக்கு வேலைகளில் முன்னுறிமை தர நிறுவனங்களை நிர்பந்தித்து வருகிறது. இதனால் இந்த நாடுகளிலிருந்து இந்தியா உட்பட வெளிநாடுகளுக்கு தரப்படும் பணிகள் குறைத்துக் கொள்ள படலாம் எனக் கூறப்படுகிறது.

இதனால் தற்போது இந்திய ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கிவிட்டது. இந்திய ஐடி நிறுவனங்களான
டெக் மகிந்த்ரா நிறுவனம் மற்றும் விப்ரோ தனது ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஐடி ஊழியர்களின் நலனுக்காக இயங்கி வரும் தேசிய ஐடி ஊழியர் செனட் (NITES) இந்த புகாரை எழுப்பியுள்ளது. அந்த புகாரில் புனேவில் அமைந்திருக்கும் டெக் மகிந்த்ரா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும் ஷிஃப்ட் கொடுப்பனவு (shift allowance) மே 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக டெக் மகிந்த்ராவின் 13,000 ஊழியர்களுக்கான ஊதியம் குறைந்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உத்தரவுகளை, விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் டெக் மகிந்த்ரா நிறுவனம் மீறியுள்ளது. ஆகவே இந்நிறுவனத்தின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதனையடுத்து இந்நிறுவனங்களுக்கு தொழிலாளர் ஆணையம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் மார்ச் 31ஆம் தேதியன்று மகாராஷ்டிர அரசு போட்ட தீர்மானத்தின் படி மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும், ஊதியம் வழங்கப்பட்ட பின்னர் தொழிலாளர் ஆணையர் அலுவகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெக் மகிந்த்ரா தனது ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனவும், அவர்களது சம்பளத்தை குறைக்கக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

தொழிலாளர் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஐடி ஊழியர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.