Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

#image_title

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணம் தூக்கமின்மை! முழு விவரங்கள் இதோ!

தூக்கமின்மை ஏற்படுத்தும் பாதிப்புகள்.அதிக கவலை, மன அழுத்தம், வேலையின்மை, காரணமாக பலரும் தூக்கமின்மை பாதிப்பினால் அவதிப்படுகின்றன. மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் சமூக வலைதளங்களால் தூக்க நேரத்தை குறைத்துக் கொண்டோ அல்லது தூக்கத்தை தவிர்த்து கொண்டு இருக்கின்றனர்.

சராசரியாக தினமும் 6 ல் இருந்து 8 மணி நேரம் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். ஆனால் சரியாக தினமும் தூங்காமல் இருப்பதனால் மன அளவிலும் உடம்ப அளவிலும் பல்வேறு பிரச்சனைகள் வரக்கூடும்.

மனம் சார்ந்த பிரச்சனை.தினமும் போதுமான அளவு தூங்காமல் இருப்பதனால் உடலில் காட்டிசம் என சொல்லக்கூடிய டிரஸ் ஹார்மோன் அதிகரிக்கிறது. இதன் காரணமாக அதிக கவலை, மன அழுத்தம், எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லாத தன்மை, அதிக கோபம் , மனம் சார்ந்து பிரச்சனைகள் உண்டாக்குவது மட்டுமல்லாமல் அதிக உடல் சோர்வு, உடல் பலவீனம் அடைதல், போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இருதயம் சார்ந்த பிரச்சனைகள்.தினமும் போதுமான அளவு தூங்காமல் இருப்பதனால் பிளட் பிரஷர் ,பிளட் சுகர், இன்ப்ளமேசன் அளவு அதிகரிக்கிறது. தினமும் 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு இருதய படபடப்பு ,இருதய பலவீனம், இருதய வாழ்வு அடைப்பு, போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது.

உடல் எடையை அதிகரிக்கும்.தூக்கமின்மை மூளையில் லெப்டின் என்று சொல்லக்கூடிய பசி நிறைவை கொடுக்கக்கூடிய ஹார்மோனை குறைத்து குரோனிங் என்று சொல்லக்கூடிய பசி உணர்வு அதிகரிக்கும் இதன் காரணமாக எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்காது.

தோல் சார்ந்த பிரச்சினை.தினமும் போதுமான அளவு தூங்காமல் இருப்பதால் உடலில் காட்டிசம் என்று சொல்லக்கூடிய டிரஸ் ஹார்மோன் அதிகரிக்கும். காட்டிசம் தோலுக்கு மிருதவையும் வழவழப்பையும் கொடுக்கக்கூடிய கொலாஜின் செல்களை அளிக்கும். இதன் காரணமாக தோலில் சுருக்கம் ஏற்பட்டு இளம் வயதிலேயே வயதானவர்கள் மாதிரி தெரியக்கூடும். இதனை சரி செய்ய தூக்கம் மிகவும் அவசியமானது.

Exit mobile version