அமலுக்கு வந்தது தளர்வுகள் உடனான ஊரடங்கு!

0
131

நோய் தொற்று பாதிப்பு அதிகரித்ததன் காரணமாகவே மாதம் 31-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை இரண்டு முறை 14 நாட்கள் கடுமையான ஊரடங்கு மாநில அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கை மீறி அவர்கள் மீது அபராதம் வழக்குப்பதிவு போன்றவை தடுக்கப்பட்டன விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் தளர்வுகள் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிப்பு வெளியானது .அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஒரு சில தளர்வுகள் உடன் ஊரடங்கு அமலுக்கு வந்திருக்கிறது. மளிகை பொருட்கள், பலசரக்கு சாமான்கள், காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையில் செயல்படலாம் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் கடை உரிமையாளர்கள் காலை முதலில் கடைகளை திறந்து வியாபாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கோயம்பேடு போன்ற மற்ற மாவட்டங்களில் இருக்கின்ற காய்கறி பழங்கள் மற்றும் மொத்த விற்பனை சந்தைகள் போன்றவை செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கின்றன. மொத்த விற்பனை சந்தைகளில் இருக்கின்ற சில்லரை விற்பனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லா அரசு அலுவலகங்களுக்கும் 30% பணியாளர்களுடன் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒருநாளைக்கு 50 சதவீதம் டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு பத்திர பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கம் செய்யும் கடைகள் மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. விமானம் ரயில் நிலையம் மூலமாக வருகை தரும் பயணிகள் போன்றவர்களை கண்காணிப்பதற்காக பதிவு செய்து பயணிக்கும் முறை தொடர்ச்சியாக அமலில் இருந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களுக்கு மளிகைக் கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகளில் திறப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆகவே இன்று முதல் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் காலை முதலே வழக்கம்போல சாலைகளில் வாகனங்கள் செல்வதை காணமுடிகிறது!