தாம்பத்தியம் என்பது இரு உள்ளங்களின் உணர்வை பரிமாறிக் கொள்ளும் விஷயமாக பார்க்கப்படுகிறது.கணவன்,மனைவி இடையே அன்பை அதிகரிக்கும் பாலமாக திகழ்வது இந்த உடலுறவு தான்.தங்கள் துணையை மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம்.
அதேபோல் தான் உடலுறவிற்கு பிறகும் சில விஷயங்களை தம்பதியர் பின்பற்ற வேண்டும்.குறிப்பாக பெண்கள் உடலுறவில் ஈடுபட்ட பிறகு நிச்சயம் சில சுகாதார செயல்பாடுகளில் ஈடுபட வேண்டியது அவசியமாக உள்ளது.
ஆண்கள் உடலுறவிற்கு பிறகு ஆண்குறி மீதுள்ள ஆணுறையை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.அதன் பிறகு சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் கொண்டு ஆண்குறியை சுத்தம் செய்ய வேண்டும்.
பெண்கள் உடலுறவிற்கு பிறகு தங்கள் பிறப்புறுப்பை பாதுகாப்பான முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.இதற்காக கெமிக்கல் சோப்,க்ரீம் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
சுத்தமான தண்ணீர் மட்டும் கொண்டு அந்தரங்க பகுதியை க்ளீன் செய்ய வேண்டும்.அடுத்து தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.முடிந்தால் வெந்நீர் குளியல் போடலாம்.இதனால் உடலுறவினால் ஏற்பட்ட உடல் வலி,சோர்வு போன்றவற்றை போக்கும்.
வெந்நீர் குளியலுக்கு பிறகு நிச்சயம் நல்ல உடல் புத்துணர்வு அடைவதோடு நல்ல தூக்கம் கிடைக்கும்.உடலுறவிற்கு பிறகு கைகளை சோப் அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
உடலுறவின் போது அணிந்த உள்ளாடையை உடலுறவிற்கு பிறகு அணிவதை தவிர்க்க வேண்டும்.சிலர் அதே உள்ளாடையை அணிவதால் அந்தரங்க அரிப்பு,சிறுநீர்ப்பாதை தொற்று போன்ற பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
உடலுறவிற்கு பிறகு தளர்வான ஆடைகளை அணிவதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.பெண்கள் தங்கள் உடலுறவிற்கு பிறகு இந்த விஷயங்களை பின்பற்றினால் பாக்டீரியா மற்றும் நோய் தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துவிடலாம்.பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இந்த விஷயங்களை செய்து வந்தால் பாலியல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.