Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே இறுக்கமான பிரா போடுறிங்களா? இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கு தான்!!

பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க பிரா போன்ற உள்ளாடைகளை அணிகின்றனர்.இந்த பிரா மார்பின் வடிவத்தை பராமரிக்க உதவுகிறது.பெண்களின் மார்பகங்களை பாதுகாக்கும் உள்ளாடையான பிராவை மார்பக அளவிற்கு ஏற்றவாறு அணிய வேண்டியது முக்கியம்.ஆனால் இன்று பலர் இறுக்கமான உள்ளாடையை அணிகின்றனர்.

இதனால் பொதுவெளியில் அசௌகரிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் பின்விளைவுகளை அறிந்தால் இனி அந்த தவறை செய்ய மாட்டீர்கள்.உள்ளாடை அணிவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் சரியான அளவுள்ள உள்ளாடை அணிவது அதைவிட முக்கியம்.

இறுக்கமான பிரா அணிவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)டைட்டான பிரா அணிந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.மார்பு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவது அசௌகரிய சூழலை ஏற்படுத்தும்.

2)இறுக்கமான பிரா அணிந்தால் வயிறு மற்றும் மார்பிற்கு இடைப்பட்ட பகுதியில் அதிக வலி ஏற்படும்.கனமான பிரா அணிந்தால் மார்பு பகுதியில் இரத்த ஓட்டம் தடைபடும்.

3)கனமான பிரா அணிந்தால் அப்பகுதியில் இருந்து வியர்வை வெளியேறுவது கடினமாகிவிடும்.இறுக்கமான பிரா அணிந்தால் மார்பு பகுதியில் தோல் அலர்ஜி ஏற்படலாம்.சரும வெடிப்பு,தோல் எரிச்சல்,தோல் தடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

4)பிரா அணியும் லைனில் பருக்கள்,தடிப்புகள்,தோல் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக் கூடும்.

5)இறுக்கமான உள்ளாடையால் தோல் அரிப்பு அதிகமாக ஏற்படும்.தொடர்ந்து இறுக்கமான பிரா அணிந்தால் அவ்விடத்தில் புண்கள் மற்றும் பிப்பு ஏற்படலாம்.எனவே இனி உங்கள் மார்பக அளவிற்கு ஏற்ற உள்ளாடையை தேர்வு செய்து அணியுங்கள்.மார்பகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் கடினமான பிரா அணிவதை தவிர்க்க வேண்டும்.

Exit mobile version