Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஊரடங்கு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் ஏரிக்கு சென்ற பெண்கள் : அலட்சியம் காட்டியதால் நேர்ந்த பரிதாபம்..!!

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள மணிமங்கலம் பகுதியில் உள்ளது கரசங்கால் ஏரி. அதே பகுதியை சேர்ந்த நான்கு பெண்கள் கரசங்கால் ஏரிக்கு துணி துவைக்க சென்றுள்ளனர்.

இந்த நான்கு பெண்களில் இருவர் திருமணம் ஆன நடுத்தர வயது பெண்கள், மற்ற இருவர் இளம் பெண்கள் என்று தெரிய வருகிறது. இவர்கள் ஊரடங்கு நேரத்தில் வீட்டில் இருந்ததால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஏரிக்கு துணி துவைக்க கிளம்பியுள்ளனர்.

இந்த பெண்கள் கரசங்கால் ஏரியில் துணி துவைத்த பிறகு அங்கேயே ஒன்றாக சேர்ந்து குறித்துள்ளனர். குளித்து கொண்டு இருக்கும் போது இளம் பெண் ஒருவர் சேற்றில் சிக்கி மூழ்க தொடங்கினார், அவரை காப்பாற்ற அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக சென்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மற்றவர்களை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக சென்று மூழ்கி இறந்துவிட்டனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இந்த பெண்கள் நான்கு பேரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டிலேயே இருந்திருந்தால் இப்படி ஒரு விபரீதம் நிகழந்திருக்காது என்று அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் பலியான நான்கு பெண்களும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த பகுதியே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version