Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குழந்தை வரம் கொடுக்கும் அதிசய கோவில்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த போட்டு பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மகான் ஆறுமுக ஸ்வாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்துகொண்டு அருளாசி வழங்கி இருந்தார்.

இந்த சூழ்நிலையில், வயது முதிர்வு காரணமாக ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதம் இருந்து இங்கே வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து மடிப்பிச்சையாக பெற்று அருகில் இருக்கின்ற குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று தெரிவித்து ஜீவ சமாதி அடைந்திருக்கிறார்.

அதனை அடுத்து அந்த இடத்தில் பொதுமக்கள் கோவில் கட்டி வணங்கி வருகிறார்கள். ஆடி அமாவாசை தினமான நேற்று முன்தினம் குருபூஜை விழா நடந்தது. இதனையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. குழந்தை வரம் வேண்டி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் இருக்கின்ற சாதுக்களிடம் பிரசாதம் வாங்கியதாக சொல்கிறார்கள்.

தொடர்ச்சியாக அவர்கள் கோவில் அருகில் இருக்கின்ற குளக்கரை படியில் சென்று பிரசாதத்தை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு நான் சோறு சாப்பிட்டார்கள். அதோடு வேண்டுதல் நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கையாக செலுத்தி இருக்கிறார்கள்.

Exit mobile version