Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே.. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

#image_title

பெண்களே.. முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க இப்படி செய்யுங்கள்!! நிச்சயம் பலன் கிடைக்கும்!!

பெண்களின் அழகை கெடுப்பதில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளுக்கு முக்கியபங்கு உண்டு. அதிலும் ஆண்களைப் போல் வளரும் மீசையால் முகத்தை வெளியில் காட்ட முடியாமல் பெண்கள் பலர் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதற்கு மீசை முடிகளை சேவ் செய்தல், இராசயன பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை செய்வதன் மூலம் ஒரு பயனும் இல்லை. இதனால் இந்த பிரச்சனை முகத்தில் இன்னும் அதிகமாக தான் காணப்படுகிறது. இவ்வாறு தீராத பிரச்சனையாக பார்க்கப்படும் இதனை வெறும் 3 பொருட்களை வைத்து எளிதில் போக்கி விட முடியும்.

தேவையான பொருட்கள்:-

*கடலை மாவு – 1 தேக்கரண்டி

*ரோஸ் வாட்டர் – 1 தேக்கரண்டி

*எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் தலைக்கு பயன்படுத்தும் கடலை மாவு 1 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் வாசனை நிறைந்த ரோஸ் வாட்டர் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி 2 தேக்கரண்டி அளவு சாறு பிழிந்து கொள்ளவும். இதை கடலை மாவு மாற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகத்தில் தேவையற்ற முடிகள் காணப்படும் இடங்களில் அப்ளை செய்து கொள்ளவும்.

15 நிமிடங்களுக்கு பிறகு ஒரு துணி வைத்து நன்கு அழுத்தி அந்த பேஸ்டை நீக்க வேண்டும். பெண்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் விரைவில் முக அழகை கெடுக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் அழகாக காணப்படும்.

Exit mobile version