பெண்கள் மார்பகங்கள் சரியான அளவில் இருக்க க்ரீம் பயன்படுத்துகின்றனர்.சிலர் சர்ஜரி செய்து மார்பக அளவை அதிகரிக்கின்றனர்.ஆனால் இவை எதுவுமின்றி இயற்கையான முறையில் மார்பக அளவை அதிகரிக்கும் வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1)சோயா
2)தண்ணீர்
25 கிராம் சோயாவை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து பால் எடுத்து பருகி வந்தால் மார்பக அளவு இயற்கையான முறையில் பெரியதாகும்.
1)அக்ரூட் பருப்பு
2)முந்திரி
3)நிலக்கடலை
4)பசும் பால்
50 கிராம் அக்ரூட் பருப்பு,50 கிராம் முந்திரி பருப்பு மற்றும் 50 கிராம் நிலக்கடலையை வாணலியில் போட்டு வறுத்து பவுடராக்கி கொள்ளவும்.
பிறகு இதை டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் அரைத்த பொடி தேவையான அளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் மார்பக அளவு அதிகரிக்கும்.
1)சோம்பு
2)ஆலிவ் எண்ணெய்
ஒரு தேக்கரண்டி சோம்பு மற்றும் 50 மில்லி ஆலிவ் எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு இதை ஆறவிட்டு மார்பு மீது தடவி மசாஜ் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வந்தால் மார்பகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
1)பூசணி விதை
2)சோம்பு
3)ஆளி விதை
4)சூரியகாந்தி விதை
இவை நான்கையும் சம அளவு எடுத்து வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து குடித்து வந்தால் மார்பக அளவு அதிகரிக்கும்.
1)எள்
2)பால்
ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை பக்குவமாக வறுத்து அரைத்து ஒரு கிளாஸ் அளவு பாலில் போட்டு கொதிக்க வைத்து பருகி வந்தால் மார்பக அளவில் நல்ல மாற்றம் தெரியும்.அதேபோல் ஐஸ்கட்டியை மார்பகத்தில் வைத்து ஒத்தடம் கொடுத்து வந்தால் அதன் அளவு அதிகரிக்கும்.