பெண்களே.. வாங்கிய “புளி” கெட்டு போகாமல் வருட கணக்கில் வைத்து பயன்படுத்த இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
கடையில் இருந்து புளியை வாங்கி வந்ததும் அப்படியே ஸ்டோர் பண்ணக் கூடாது. இப்படி செய்வதால் தான் புளி விரைவில் கெட்டு விடுகிறது. புழு, வண்டு உருகுவாகி பயன்படுத்த முடியாமல் தூக்கி எரியும் நிலைக்கு வந்து விடுகிறது.
எந்த ஒரு பராமரிப்பும் இல்லாமல் புளியை நீண்ட நாட்களுக்கு வைத்து பயன்படுத்த முடியாது மக்களே. புளி விற்கும் விலைக்கு அதை சற்று அக்கறையாக பராமரித்தால் தான் நீண்ட நாட்கள் வரை பயன்படுத்த முடியும். புளியின் விலை அதன் சீசன் டைமில் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் விலை குறைவாக கிடைக்காதே என்று நாமளும் வாங்கி ஒரு டப்பாவில் போட்டு வைத்து விடுகிறோம்.
ஆனால் அதன் பின் புளியை கண்டு கொள்வதில்லை. ரசம் வைக்கும், புளி குழம்பு வைக்கும் பொழுது தான் அதை கவனிக்கிறோம். சிலர் ஈரக் கையோடு புளி டப்பா அல்லது ஜாடியில் உள்ள புளியை எடுக்கின்றனர். இதனால் புளியில் ஈரப்பதம் ஏற்பட்டு விரைவில் கெட்டு விடுகிறது.
புளியை வருடக் கணக்கில் வைத்து பயன்படுத்த எவ்வாறு பராமரிக்க வேண்டும்?
கடையில் இருந்து வாங்கி வந்த புளியில் உள்ள விதை அதாவது கோட்டை, காம்பு பகுதி, ஓடு மற்றும் நாரை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும். இதை ஒரு நாள் முழுவதும் நல்லா சுள்ளுனு அடிக்கும் வெயிலில் போட்டு காய விடவும்.
பின்னர் ஈரம் இல்லாத ஒரு பீங்கான் பாட்டிலில் சிறிதளவு கல் உப்பு கொட்டிக் கொள்ளவும். அடுத்து காயவைத்துள்ள புளியை அதில் போட்டு கொள்ளவும். அடுத்து புளி மேல் சிறிதளவு கல் உப்பு போட்டு கொள்ளவும். பின்னர் இந்த பாட்டிலை மூடி விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் புளி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
மாதத்தில் ஒரு முறை இந்த புளியை வெயிலில் காயவைத்து மீண்டும் பாட்டிலில் ஸ்டோர் செய்து வரவும். இந்த புளியை அலுமியம் பாத்திரங்களில் சேமிப்பதை தவிர்க்கவும். பீங்கான் பாத்திரத்தில் சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டு வரவும்.