Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே நோட் திஸ் பாய்ண்ட்.. PCOS பிரச்சனையை சரி செய்யும் மூன்று புரோட்டீன் பருப்புகள்!!

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்(PCOS) பாதிப்பு பெண்கள் பலருக்கும் இருக்கிறது.கருப்பையில் நீர்க்கட்டி இருப்பதை தான் PCOS என்று சொல்கிறோம்.இந்த PCOS பிரச்சனை இருக்கும் பெண்களுக்கு உரிய காலத்தில் மாதவிடாய் ஏற்படாது.அது மட்டுமின்றி நீர்க்கட்டி இருந்தால் கருத்தரிப்பு கடினமாகிவிடும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்(PCOS) வருவதற்கான காரணங்கள்:

**அதிக மன அழுத்தம்
**மோசமான உணவுப்பழக்கம்
**வாழ்க்கைமுறை
**பதட்டம்

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட் ரோம்(PCOS) அறிகுறிகள்:

**மாதவிடாய் தாமதம்
**பல மாதங்களாக மாதவிடாய் வராமல் இருத்தல்
**முடி உதிர்வு அதிகமாதல்
**முகத்தில் பருக்கள் அதிகரித்தல்
**உடலில் ரோமங்கள் அதிகமாதல்
**உடல் எடை அதிகரித்தல்

இந்த PCOS பிரச்சனை இருக்கும் பெண்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண்டும்.அதிக புரதம் நிறைந்த நிறைந்த பருப்புகளை சாப்பிட்டு வந்தால் PCOS பாதிப்பு குணமாகும்.

1)துவரை

இந்த பருப்பில் புரோட்டீன் சத்து அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை வேகவைத்து மசித்து உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட வேண்டும்.துவரையில் இருக்கின்ற பைபர் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

2)கருப்பு கொண்டைக்கடலை

இந்த பருப்பில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.இதை வேகவைத்தோ அல்லது முளைகட்டி பவுடராக அரைத்தோ சாப்பிட்டு வந்தால் PCOS பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

3)பிளாக் பீன்ஸ்

புரதச்சத்து நிறைந்து காணப்படும் கருப்பு பீன்ஸை அடிக்கடி உட்கொண்டு வந்தால் PCOS பாதிப்பு குணமாகும்.இதில் உள்ள பைபர் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.அதேபோல் பருப்பு வகைகளை ஊறவைத்து மூளைக்கட்டி சாப்பிட்டு வந்தால் கருப்பையில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.PCOS பாதிப்பால் அவதியடைந்து வரும் பெண்கள் இனி இந்த பருப்புகளை உட்கொண்டு பலனை பெறுங்கள்.

Exit mobile version