பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!

0
329
#image_title

பெண்களே.. கர்ப்ப காலத்தில் வரும் வாந்தியை கட்டுப்படுத்த சில வழிகள்!

பெரும்பாலான பெண்கள் தங்களது கர்ப்ப காலத்தில் வாந்தி எடுப்பது என்பது வழக்கமான ஒன்று தான். தண்ணீர் குடித்தால், சாப்பிட்டால் வாந்தி வருவது, தூங்கும் பொழுது வாந்தி உணர்வு ஏற்படுவதால் கர்ப்பிணி பெண்கள் அதிகம் சிரம்பப்படுகின்றனர்.

கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு அதிகம் வாந்தி அதிகம் வரும். இந்த வாந்தி உணர்வை கட்டுப்படுத்த சில வழிகள் இதோ.

உடலில் கேஸ் உருவாகக் கூடிய உணவை முதல் மூன்று மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

தண்ணீரை சூடுபடுத்தி ஆறவைத்து குடிப்பதன் மூலம் வாந்தி உணர்வை கட்டுப்படுத்தலாம்.

நீரில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதினால் வாந்தி உணர்வு நிற்கும்.

ஒரு கப் மாதுளம் பழம் மற்றும் 1 துண்டு பட்டையை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தண்ணீர் கலந்து ஜூஸ் செய்து குடித்தால் வாந்தி உணர்வு தடுக்கப்படும்.

பிளாக் டீ செய்யும் பொழுது சிறிது இஞ்சி துண்டு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் வாந்தி உணர்வு குறையும்.