பெரும்பாலான பெண்களுக்கு முகத்தில் தேவையற்ற முடிகள் வளர்ந்து அவர்களின் இயற்கை அழகை கெடுகிறது.இதற்கு முக்கிய காரணம் ஹார்மோன் மாற்றம் என்று சொல்லப்படுகிறது.முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இங்கு கொடுக்கப்பட்டுள்ள பேஸ்டை முகத்திற்கு அப்ளை செய்யுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)கஸ்தூரி மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒன்றரை தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
*ஒரு தேக்கரண்டி அளவு கஸ்தூரி மஞ்சள் தூளை கிண்ணத்தில் கொட்டிக் கொள்ள வேண்டும்.கஸ்தூரி மஞ்சள் தூள் இல்லையென்றால் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
*அதன் பிறகு ஒன்றரை தேக்கரண்டி பசும் பாலை மஞ்சள் தூளில் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.இதை முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகள் மீது அப்ளை செய்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் வரை காய வைக்க வேண்டும்.
*பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி சுத்தம் செய்யுங்கள்.இந்த மஞ்சள் பால் மாஸ்க் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி
2)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:-
*ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
*பிறகு ஒரு தேக்கரண்டி அளவு அஸ்கா சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.
*இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.ஒரு மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.இதை தினமும் செய்து வந்தால் முகத்தில் வளர்ந்துள்ள முடிகள் சீக்கிரமாக கொட்டிவிடும்.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளை முட்டை கரு – ஒன்று
தயாரிக்கும் முறை:-
*முதலில் ஒரு முட்டையை உடைத்து அதில் இருந்து வெள்ளைக்கருவை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
*பிறகு இதை நுரை வரும் வரை ஸ்பூன் கொண்டு கலந்துவிடுங்கள்.அதன் பிறகு இந்த வெள்ளை கருவை முகத்தில் வளர்ந்துள்ள முடிகள் மீது அப்ளை செய்து நன்றாக காய வைக்க வேண்டும்.
*30 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு வெள்ளைக்கரு மாஸ்க்கை ரிமூவ் செய்ய வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகள் நீங்கிவிடும்.