பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

0
112
#image_title

பங்குனி வெயிலில் முகம் பளபளன்னு இருக்க இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க பெண்களே!!

வெயில் காலத்தில் சருமத்தின் நிறம் டல்லடிக்க தொடங்கி விடும்.இதனால் மேனி அழகு குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது.

எனவே சருமத்தை அதிக பொலிவாக வைத்துக் கொள்ள வீட்டு வைத்திய குறிப்புகளை ட்ரை பண்ணவும்.

1)மஞ்சள்
2)பசும்பால்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் சேர்க்கவும்.கிழங்கு மஞ்சளை அரைத்து பயன்படுத்தினால் இன்னும் சிறப்பு.

அதன் பின்னர் 2 தேக்கரண்டி காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.இதை முகம் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.

இதை காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி அதிக பொலிவுடன் காணப்படும்.

1)சந்தனம்
2)பசும்பால்

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சந்தனம் சேர்க்கவும்.அதன் பின்னர் 2 தேக்கரண்டி காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் கலக்கவும்.இதை முகம் முழுவதும் தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவவும்.

இதை காலை மற்றும் இரவு நேரத்தில் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி அதிக பொலிவுடன் காணப்படும்.