Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

#image_title

பெண்களே உங்கள் “கண் புருவம்” அடர்த்தியாக வளர 5 சொட்டு தேங்காய் எண்ணெயை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

மங்கையரின் கண் புருவம் அடர்த்தியாக இருந்தாலே தனி அழகு தான். ஆனால் எல்லாருக்கும் புருவம் அடர்த்தியாகவும், கருமையாகவும் இருப்பதில்லை. இதனால் பெண்கள் பலர் குறுகிய நாட்களிலேயே புருவம் வேகமாக வளர வேண்டும் என்பதற்காக இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்த ஆரமிக்கின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் பக்க விளைவுகள் வருமே தவிர எந்த ஒரு பலனையும் பெற முடியாது. கண் புருவம் அடர்த்தியாக வளர இயற்கை பொருட்களை பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்:-

*கற்றாழை ஜெல்

*விளக்கெண்ணெய்

*தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

முதலில் ஒரு கற்றாழை மடலை எடுத்து தோல் நீக்கி ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை இரவு தூங்குவதற்கு முன் புருவத்தின் மேல் தடவி மஜாஜ் செய்யவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் விரைவில் புருவத்தில் நல்ல மாற்றம் காண முடியும். இந்த ரெமிடியை எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

Exit mobile version