Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

பிரபல ரவுடியை பிடிக்க பெண் எஸ்.ஐ. செய்த தந்திரம்

உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் கொலை கொள்ளைகள் உட்பட பல சட்ட விரோத செயல்களை செய்து வந்த ரவுடி ஒருவரை பெண் எஸ்ஐ ஒருவர் காதலிப்பது போல் நடித்து பிடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாலகிஷன் என்ற ரவுடியின் அம்மாநிலத்தில் மட்டுமின்றி அருகிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பல கொலை கொள்ளைகளை செய்துள்ளார். அவர் மேல் இரு மாநிலக் காவல்துறையினர் பல வழக்குகளை பதிவு செய்திருந்த நிலையில் காவலர்களின் பிடியில் சிக்காமல் தப்பித்துக் கொண்டு வந்துள்ளார் பாலகிஷன்

இந்த நிலையில் பாலகிஷன் பெண்கள் விஷயத்தில் வீக் என்பதைக் கண்டுபிடித்த போலீசார் அவரை ஒரு பெண் மூலமாகவே பிடிக்க முடிவு செய்தனர். இதனை அடுத்து மாதவி என்ற எஸ்.ஐ., பாலகிஷனின் பேஸ்புக்கை தொடர்பு கொண்டு அவருடன் நட்புடன் பழகினார்

ஓரிரு நாட்கள் பழகிய பின்னர் பாலகிருஷ்ணன் மாதவியை திருமணம் செய்து கொள்வதாக கூறியவுடன் இதுதான் சமயம் என்று, அருகிலுள்ள ஒரு கிராமத்து கோவிலுக்கு வாருங்கள் அங்கு நானும் வருகிறேன் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று மாதவி கூறியுள்ளார்
இதனை உண்மை என நம்பிய பாலகிஷன் அந்த கோவிலுக்கு வரும்போதும் மறைந்திருந்த காவல்துறையினர் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். இரு மாநில போலீசார்களை ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ஒரு ரவுடியை ஒரு பெண் போலீஸ் காதலிப்பது போல் நடித்து பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Exit mobile version