விடாமுயற்சி படம் குறித்து சொன்னது மாதிரியே அப்டேட் கொடுத்திருக்கிறது லைகா நிறுவனம். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம், 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால், படக்குழு வெளியீட்டை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர், அர்ஜுன் தாஸ், சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விடாமுயற்சி’ படத்தின் ட்ரைலர் வெளியானபோது, இது ஹாலிவுட் படமான ‘பிரேக் டவுன்’ படத்தின் தமிழ் ரீமேக் என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, ‘பிரேக் டவுன்’ படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்திற்கு ராயல்டி கோரி மின்னஞ்சல் அனுப்பியதாகவும் கூறப்பட்டது. இந்த உரிமை தொடர்பான சிக்கல்களே படத்தின் வெளியீட்டை தள்ளிவைக்க காரணமாக இருக்கலாம்.
இந்த நிலைமையில், ‘விடாமுயற்சி’ படக்குழு அஜித் ரசிகர்களை சமாதானப்படுத்த முயற்சிக்கிறது. அவர்கள், “காத்திருப்பு மதிப்பிடப்படும்” என உறுதிப்படுத்தி, விரைவில் புதிய தகவல்களை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.மேலும், ‘விடாமுயற்சி’ படத்தின் ‘சவதீகா’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல், அஜித் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலைமையில், அஜித் ரசிகர்கள் படக்குழுவின் அடுத்த அறிவிப்புகளை எதிர்பார்த்து உள்ளனர்.