Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்பத்தில் சந்தோஷம் பெருக லட்சுமி குபேர விரதம்! எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

]அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி நவமி இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து நீராடி விட்டு உடை மாற்றிக்கொண்டு நல்ல நேரத்தில் லட்சுமி, குபேரன், படம் குபேர யந்திரம், இதையெல்லாம் எடுத்து மஞ்சள் குங்குமம் வைத்து வெற்றிலை வைத்து பூஜைகள் வைக்கவேண்டும். குபேரன் யந்திரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.

அந்தப் படத்திற்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன்மீது நவதானியத்தை கலக்காமல் சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும்.

அதன் நடுவே ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் அதனை நிரப்பி அதில் சற்று மஞ்சள் தூளைப் போட்டு செம்பு மேல் மஞ்சள் பூசிய ஒரு தேங்காயை வைத்து சுற்றிலும் மாவிலை சொருகி கலசம் போல அமைக்க வேண்டும். வெற்றிலை பாக்கு பழம் அனைத்தையும் கலசத்துக்கு முன்பு வைக்கவேண்டும்.

மஞ்சள் தூளில் தண்ணீர் விட்டு சிறியதாக பிள்ளையார் பிடித்து வையுங்கள். அதன் பிறகு படம், யந்திரம், கலசம், மஞ்சள் பிள்ளையார், உள்ளிட்டவற்றுக்கு பூமாலை போடவும், மேலும் ஊதுவத்தி ஏற்றி வைக்க வேண்டும். கிழக்கு பார்த்து அமர்ந்து பிள்ளையார் மந்திரம், ஸ்லோகங்களைக் தெரிவிக்கவேண்டும்.

அதன் பிறகு லட்சுமி ஸ்லோகம் துதியை சொல்ல வேண்டும். குபேரனை அவருடைய துதி ஸ்லோகங்களை சொல்லி வணங்க வேண்டும். எந்த துதியும் தெரியவில்லை என்றாலும் கவலை வேண்டாம், மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின், திருநாமங்களுடன் போற்றி சேர்த்து கூறவேண்டும்.

அதன் பிறகு தூப தீபம் காட்டி வாழைப்பழம், பசும்பால், பாயசம் என்று உங்களால் முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம். வெற்றிலை பாக்கு பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணை பணத்தை ஏழைகளுக்கும், வழங்க வேண்டும்.

நியாயமான தேவைகளை நிறைவேற்றி நல்ல தேவையான செல்வத்தையும், நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும், அனைவருக்கும் கொடு என்று குபேரனை மனதுக்குள் நினைத்து வேண்டி கொள்ள வேண்டும்.

இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள், யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், கடைபிடிக்கலாம்.

Exit mobile version