Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி?

#image_title

செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சமி குபேரர் வழிபாடு – செய்வது எப்படி?

ஆண், பெண் அனைவருக்கும் தங்க ஆபரணங்கள் மீது தனி பிரியம் இருக்கும். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு கனவில் கூட தங்கம் வாங்க முடியாது போல.. அந்த அளவிற்கு நாளுக்கு நாள் தங்கம் உச்சமடைந்து வருகிறது.

குண்டுமணி தங்கம் கூட இல்லை என்று வருந்துபவர்கள் லட்சுமி குபேரர் வழிபாடு செய்து வாருங்கள்.

லட்சுமி குபேரர் வழிபாடு…

இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது வெள்ளிக் கிழமையில் செய்யலாம்…

வீட்டு பூஜை அறையை சுத்தப்படுத்திவிட்டு இந்த பூஜையை செய்யவும். பூஜை அறைக்குள் லட்சுமி குபேரர் படம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இந்த படத்திற்கு முன் பச்சரிசியில் கோலமிடவும்.

பிறகு அதன் மேல் ஒரு பித்தளை தட்டு வைத்து அதில் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி இரண்டு திரி போட்டு தீபம் ஏற்றவும். பிறகு வீட்டில் செல்வம் சேர வேண்டும் என்று மனதார வேண்டவும்.

இவ்வாறு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை நாளில் செய்து வந்தால் வீட்டில் செல்வம் சேரத் தொடங்கும்.

Exit mobile version