அடப்பாவிங்களா இதுக்கும் ஆப்பா? புலம்பும் பொதுமக்கள்!

0
124

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ஏழை, எளிய, பொதுமக்களுக்கும் மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களான சமையல் எண்ணெய் அரிசி பருப்பு மற்றும் சர்க்கரை மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்தொற்று காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவச நியாய விலை கடை பொருட்கள் மற்றும் 1000 ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

திமுக கடந்த சட்டசபை தேர்தலில் ஒவ்வொரு மாதமும் குடும்ப தலைவிகளுக்கு 10000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தின் காரணமாக, பெரும்பாலான மக்கள் எல்லோரும் புது குடும்ப அட்டைகளை பெற அதிகமாக விண்ணப்பம் செய்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு குடும்ப அட்டையில் பல்வேறு புதிய செயல் முறைகளை வீட்டிலிருந்தே செய்வதற்கான வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், குடும்ப அட்டையில் உள்ள விதிகளில் சில மாற்றங்களை செய்யவிருப்பதாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை முடிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த விதத்தில் நியாயவிலை கடைகளில் தகுதியுடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களான அரிசி, மற்றும் கோதுமையின் அளவு குறைத்து வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அதனடிப்படையில் தலைநகர் புதுடெல்லி, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், உத்திரப்பிரதேசம், பீகார், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கோதுமை கொள்முதல் சற்றே குறைவாக இருப்பதால் இந்த மாற்றத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறது.

இதற்காக புது அளவு உற்பத்தியில் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும், தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக மாநில அரசுகளுடன் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பல பேர் மோசடி செய்து போலியான வகையில் நியாயவிலைக்கடை பொருட்களை வாங்கி வருகிறார்கள் என்று மத்திய அரசுக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதன் காரணமாக தான் தற்போது அரசு குடும்ப அட்டைகளில் பல்வேறு விதிகளை மாற்றம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசுகள் வழங்கியிருக்கின்ற பரிந்துரையினடிப்படையில் புது தரநிலைகள் தயாரிக்கப்பட்டு மிக விரைவில் அது இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.