சுற்றுலாத்தளங்களை திறக்க முற்றிலும் தடை!! மாநில அரசு போட்ட திடீர் கெடுபிடி!!

0
156
Landslide again! Kerala government's new order!!

 

 

தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறில் தற்போது தென்மேற்கு பருவ மழையால் மண் சரிவுகள் ஏற்பட்டு அப்பகுதி மக்களைப் பெரும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான மூணாறு பகுதிக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வயநாடு பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் கேரளாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மண்சரிவு போன்ற பிரச்சனைகள் அப்பகுதி மக்களை பெரும் அவதிக்கு ஆளாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் இந்த தென்மேற்கு பருவ மழை காலத்தில் மக்கள் தொடர் கனமழையினாலும், நிலச்சரிவினாலும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கடந்த சில நாட்களாகவே 20 முதல் 37செ.மீ கன மழையானது பதிவாகி வந்துள்ளது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் நிலச்சரிவு, மண்சரிவு, மற்றும் பாறைகள் உருண்டு கீழே விழுதல் போன்ற காரணங்களால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள மாநில அரசானது கடும் மழையினாலும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும் மூணாறு மலைப்பிரதேசம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா செல்வதற்குத் தடை விதித்துள்ளார்கள்.

கடந்த சில நாட்களாகவே வயநாடு பகுதியில் மக்கள் மிகப்பெரிய பேரழிவிற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. அதீத மழையினால் ஏற்பட்ட நிலச்சரின் காரணமாக நிறைய உயிர்கள் பலியாயின. இன்று வரையும் மீட்பு பணியாளர்கள் இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகிறார்கள். இந்நிலையில் மேலும் மூணாறு மலைப்பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. பெருக்கெடுத்து ஓடும் காட்டாற்று வெள்ளம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துக்கும் தடை விதிப்பு செய்யப்பட்டுள்ளது.