கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!! 

0
91
Landslide caused by heavy rain!! Vehicles buried in the soil!!

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு!! மண்ணில் புதைந்த வாகனங்கள்!! 

வட இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வாகனங்கள் புதைந்ததால் 4 பேர் உயிரிழந்தனர்.

வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக பல்வேறு ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளிலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ரயில் சேவை, போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தற்போது கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக நேற்று உத்திரகாசியில் உள்ள பாலத்தின் அருகே திடீரென நிலச்சரிவு ஏற்ப்பட்டது. இதனால் அந்த வழியே வந்த 3 வாகனங்கள் நிலைகுலைந்து மண்ணில் புதைந்தன.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த மாநில பேரழிவு மற்றும் மீட்புப் படையினர் மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவில் மூழ்கிய வாகனங்களில் புதையுண்ட நால்வரில் 3பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. மேலும் நான்காவது நபரின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது என பட்வாடி துணை ஆட்சியர் கூறியுள்ளார்.

மேலும் காயமடைந்த ஏழு பேரில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த பேரிடருக்கு உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் கனமழை பெய்து வரும் இந்த சூழ்நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்ப்பது நல்லது அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.