Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

+2 மாணவர்கள் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!

கடந்த மார்ச் மாதத்தில் +1 மற்றும் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றது. இதையடுத்து, கடந்த 16 ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதனை அடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு +1 பொதுத்தேர்வு மற்றும் +2 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், +1 மாணவர்கள் விடைத்தாள் நகல், மதிப்பெண் சான்றிதழ் , மறுகூட்டலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் +2 மறுவாய்ப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்கள் மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

Exit mobile version