JEE என்ற தேர்வு என்பது இந்தியாவில் மிகவும் போட்டி தன்மை வாய்ந்த நுழைவு தேர்வாகும். இந்த நுழைவு தேர்வு மாணவர்களின் திறன் மற்றும் அறிவை மதிப்பிட நடத்தப்படுகிறது. இளங்கலை பொறியியல் திட்டங்களை பயில விரும்பும் மாணவர்களுக்கான தேர்வு ஆகும். இந்த JEE தேர்வு நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (NTA) மூலம் நடத்தப்படுகிறது.
மேலும் இந்தியாவில் பொறியியல் கல்வியின் உயர் தரத்தை பராமரிக்க மற்றும் தரநிலை படுத்த இந்த தேர்வு நடத்தப்படுகிறது. மிக முக்கியமாக தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், மத்திய அரசு நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள், நாட்டின் மதிப்புமிக்க பொறியியல் நிறுவனங்களின் சேர்கைக்காக இந்த JEE தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான JEE நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று இரவு 9.00 மணி வரை JEE இணையதளம் மூலம் விருப்பம் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கான கல்வி தகுதி 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக்கியமாக உயர் நிலை வகுப்பில் இயற்பியல், வேதியியல், மற்றும் கணிதத்தை முக்கிய படங்களாக கொண்டு படித்திருக்க வேண்டும். அதில் 12-ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.