Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தனியார் மருத்துவமனைகளுக்கு இடும் கடைசி எச்சரிக்கை- முதல்வர் எடப்பாடி!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு மருத்துவமனைகளுக்கு செல்லாத விருப்பமில்லாத பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. இதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு நிர்ணயித்திருந்தது.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள BE WELL என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக 20 லட்சம் கட்டணம் வசூல் செய்தது பரபரப்பாகியுள்ளது.

சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 19 நாட்களில் சுமார் 20 லட்சம் வரை கட்டணம் வசூலித்தது தெரியவந்தது.

இதனை அறிந்த தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதனுடன் 20 லட்சம் கட்டணம் வசூலித்த BE WELL என்ற மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் கூறியதாவது

அனைத்து தனியார் மருத்துவமனைகளும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், அதிகமாக கட்டணம் வசூலித்தால் அதற்குத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் கட்டண விபரங்கள் பார்வையாளர்களுக்கு தெரியும்படி வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

உயிருக்கு பயந்த நிலையில் மக்கள் தனியார் மருத்துவமனையை நாடிச் செல்கிறபொழுது, இது மாதிரியான தனியார் மருத்துவமனை 20 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பது மிகவும் கண்டனத்திற்குரிய விஷயம் என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

Exit mobile version