மறைந்த நடிகர் ரகுவரனின் நிறைவேறாத ஆசை!!

0
105
Late actor Raghuvaran's unfulfilled wish!!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் “குணச்சித்திர நடிகராகவும், பார்க்கும் ரசிகர்களே பயப்பட வைக்கும் வில்லனாகவும்” நடித்தவர் ‘ரகுவரன்’. இவர் ‘ஏறத்தாழ 300 படங்களுக்கும் மேல்’ நடித்துள்ளார். இவர் கேரளாவில் பிறந்துள்ளார். தந்தையின் தொழில் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் குடிபெயர்ந்தனர்.

கோவையில் இளங்கலை பட்டத்தை முடித்தார். 1982 ஆம் ஆண்டு ‘ஏழாம் மனிதன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் கதாநாயனாகவும் நடித்துள்ளார். இவர் ‘வில்லனாக நடித்த படங்களுக்கே’ அதிக ரசிகர்கள் கிடைத்தன. இவர் நடிகை ‘ரோகிணியை’ திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ‘ரிஷி’ என்ற மகன் உண்டு. இவர் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானதால் இவருடைய மனைவி இவரைப் பிரிந்தார்.

இவர் நடித்த பிளாக்பஸ்டர் ஆன படங்களில் சில “சம்சாரம் அது மின்சாரம்,பாட்ஷா முதல்வன்,ரட்சகன், முகவரி”…இவர் கடைசியாக ‘யாரடி நீ மோகினி’ திரைப்படத்தில் தனுஷ்க்கு அப்பாவாக நடித்திருப்பார். எந்த ரோல் கொடுத்தாலும் அதனை மிக நேர்த்தியாக நடித்திருப்பார் என்பதற்கு அப்படமும் ஒரு சான்று. உடல் நலக் குறைவு காரணமாக ‘2008 ஆம் ஆண்டு மறைந்தார்’.

இவர் முன் ஒரு பேட்டியில் கூறும்போது,’ என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு நடிகனானது’. சின்னதா ஒரு “நிலத்தை வாங்கி, அதுல பயிரிட்டுட்டு, அதுல வர கூலோ, கஞ்சியோ குடிச்சிட்டு, ஆடு மாடுகளை வளர்த்துட்டு இருந்திருக்கலாம்” என்றார் அவர்.