Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ரன் டைம் எவ்வளவு தெரியுமா ? வெளியான லேட்டஸ்ட் தகவல் !

இன்னும் சில வாரங்களில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘துணிவு’ படத்திற்காக அஜித் ரசிகர்கள் பலரும் தவம் கிடக்கின்றனர், ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையப்போகும் இப்படத்தை காண ரசிகர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், டிசம்பர் 18ம் தேதியான நாளைய தினம் ‘துணிவு’ படத்தின் இரண்டாம் சிங்கிள் ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடைய செய்யப்போகிறது. அஜித்தை வைத்து ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படம் வங்கி கொள்ளையாக மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.Thunivu: Ajith Kumar wraps up the Bangkok schedule of H Vinoth's  directorial | PINKVILLA

2023ம் ஆண்டில் பொங்கல் வாரத்தில் வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ஏற்கனவே சில நாடுகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது. ‘துணிவு’ படத்தை ஜனவரி 12ம் தேதியன்று வெளியிடப்போவதாக யூகே-விலுள்ள பட விநியோகஸ்தர் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது யூகே-விலிருந்து ‘துணிவு’ படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆகும். அஜித்தின் ‘துணிவு’ படத்தோடு விஜய்யின் ‘வாரிசு’ படம் மோதப்போவதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

 

 

Exit mobile version